கிளிநொச்சியில் தொடங்கப்படும் காணி பிரச்சனை தொடர்பான நடமாடும் சேவை

#Kilinochchi #service #land #PradeshiyaSabha
Prasu
1 week ago
கிளிநொச்சியில் தொடங்கப்படும் காணி பிரச்சனை தொடர்பான நடமாடும் சேவை

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் கீழ் ஆவணங்களற்று நில அளவை வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் காணித்துண்டுகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அந்தவகையில் 29.07.2025 ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ள நடமாடும் சேவையின் கீழ் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் குறிப்பிடப்படும். கிராம அலுவலர் பிரிவில் பொதுமக்கள் சமூகமளிக்க வேண்டிய இடங்களும் நடவடிக்கைக்குரிய திகதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • 29.07.2025 திகதி -மட்டுவில் நாடு கிழக்கு கிராம அலுவலர் அலுவலகம்
  • 30.07.2025 திகதி முழங்காவில் கிராம அலுவலர் அலுவலகம்
  • 31.07.2025 திகதி-பள்ளிக்குடா கிராம அலுவலர் அலுவலகம்
  • 06.08.2025 திகதி-ஆலங்கேணி கிராம அலுவலர் அலுவலகம்
  • 06.08.2025 திகதி-மட்டுவில்நாடு மேற்கு கிராம அலுவலர் அலுவலகம்
  • 07.08.2025 திகதி-கிராஞ்சி கிராம அலுவலர் அலுவலகம்
  • 12.08.2025 திகதி-கரியாலைநாகபடுவான் கிராம அலுவலர் அலுவலகம்
  • 13.08.2025 திகதி-நாச்சிக்குடா கிராம அலுவலர் அலுவலகம்
  • 14.08.2025 திகதி-நல்லூர் கிராம அலுவலர் அலுவலகம்
  • 19.08.2025 திகதி-பல்லவராயன்கட்டு கிராம அலுவலர் அலுவலகம்
  • 20.08.2025 திகதி-ஜெயபுரம் தெற்கு கிராம அலுவலர் அலுவலகம்
  • 21.08.2025 திகதி-ஜெயபுரம் வடக்கு கிராம அலுவலர் அலுவலகம்
  • 22.08.2025 திகதி-கொல்லக்குறிச்சி கிராம அலுவலர் அலுவலகம்
  • 22.08.2025 திகதி -பரமன்கிராய் கிராம அலுவலர் அலுவலகம்
மேற்குறித்த திகதிகளில் நடைபெற ஏற்பாடாகியுள்ள காணிதொடர்பான நடமாடும் சேவையின் ஊடாக தங்களது காணி தொடர்பான அதாவது ஆவணங்களற்று நிலஅளவை வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் காணித்துண்டுகள் தொடர்பான சேவையினை பொற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

பொது மக்களாகிய உங்கள்  நலனைக்கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இச்சந்தர்ப்பத்தினை தவறவிடாது பயன்பெற்றுக்கொள்ளுங்கள்.

 லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753461522.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!