கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சுற்றாடல் செயலமர்வு!
#SriLanka
#Kilinochchi
#environment
#Teacher
Soruban
4 months ago
மத்திய சுற்றாடல் அதிகார சபையினரால் கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுற்றாடல் தொடர்பான செயலமர்வு நேற்று(23.07.2025) நடைபெற்றது. குறித்த செயலமர்வு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட திறன் விருத்தி நிலையத்தில் நடைபெற்றது.
குறித்த செயலமர்வில் வடமாகாண வடக்கு வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் பொ.விஜயநாதன், தெற்கு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் க.யுவராசா, மாவட்ட முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜென்சி, வடமாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபை உதவிப் பணிப்பாளர் ப.துவாரதன், வடமாகாண மத்திய சுற்றாடல் அதிகாரசபை சிரேஸ்ட உத்தியோகத்தர் கு.சிவேந்திரம், கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
