உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் - நிலந்த ஜயவர்தனவை பதவிநீக்க தீர்மானம்!
#SriLanka
#Easter Sunday Attack
#lanka4Media
#LANKA4TAMILNEWS
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#Nilantha Jayawardena
Thamilini
4 months ago
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கை எடுக்கத் தவறியமை..அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய காவல்துறை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் இறுதியில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடந்த நேரத்தில் நிலந்த ஜயவர்தன, அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக இருந்தார்.
தகவல் கிடைத்த போதிலும் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் வழக்கிலும் அவர் குற்றவாளியாக கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
