மட்டக்களப்பு மாவட்ட கரப்பந்தாட்ட போட்டிக்கான கோப்பையை சுவீகரித்த செங்கலடி அணி

#SriLanka #Batticaloa #sports #Volleyball
Prasu
4 hours ago
மட்டக்களப்பு மாவட்ட கரப்பந்தாட்ட போட்டிக்கான கோப்பையை சுவீகரித்த செங்கலடி அணி

மட்டக்களப்பு மாவட்ட கரப்பந்தாட்ட விளையாட்டுப்போட்டிகளானது மாவட்ட சமுத்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் வெபர் உள்ளக அரங்கில் இடம் பெற்ற போது கரப்பந்தாட்ட போட்டியில் செங்கலடி அணியினர் சம்பியனாகி வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கியது. 

சமுர்த்தி வேலைத்திட்டத்தின் 30 வருட நிறைவை முன்னிட்டு " மக்கள் பலத்துடனான வளமான ஒரு நாடு" எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கரப்பந்தாட்ட போட்டிகள் இடம் பெற்று வருகின்றது.

இதன் ஒர் அம்சமாக பிரதேச செயலக மட்டத்தில் உள்ள சமுதாய அடிப்படை அமைப்பின் அங்கத்தவர்களுக்கான இறுதிப் போட்டிகளுக்கு செங்கலடி சமுதாய அடிப்படை அமைப்பு அணியினருக்கும் வாழைச்சேனை அணியினரும் இறுதிச்சுற்றுப் போட்டிகளுக்கு தெரிவாகியிருந்தனர். 

விறுவிறுப்பாக இடம் பெற்ற போட்டியில் வாழைச்சேனை அணியினர் 20 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டதுடன் ஏறாவூர் பற்று அணியினர் 25 புள்ளிகளைப் பெற்று வெற்றிக் கிண்ணத்தை சுபிகரித்தது. 

இப் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக் கிண்ணங்களையும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் வழங்கிவைத்தார்.

இந் நிகழ்வில் சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் ஜே.எப். மனோகிதராஜ், சமுதாய அமைப்பின் மாவட்ட முகாமையாளர் பகிரதன், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சமுதாய அமைப்பின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752950829.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!