பெருந்தொகை பணம் கொள்ளையடித்த 25 வயது ருஹுணு பல்கலைக்கழக மாணவர் கைது
#SriLanka
#Arrest
#Student
#Robbery
#money
#University
Prasu
4 months ago
இலங்கையில் இணையம் ஊடாக வங்கிக் கணக்கொன்றுக்குள் நுழைந்து 5 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ருஹுணு பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர் வவுனியாவைச் சேர்ந்த 25 வயதுடையவராகும். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
