யாழில் கல்வி நிலையத்தில் துவிசக்கர வண்டி திருட்டு!

#SriLanka #Jaffna #education
Soruban
4 months ago
யாழில் கல்வி நிலையத்தில்  துவிசக்கர வண்டி திருட்டு!

யாழ்ப்பாணம் - நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று இன்று காலை திருடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க வந்த மாணவர் ஒருவருடைய துவிச்சக்கர வண்டியே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.

வெளியே இருந்து வந்த நபர் ஒருவர் உள்ளே சென்று துவிச்சக்கர வண்டியை திருடிச் சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி காமெராவில் பதிவாகியுள்ளது.

துவிச்சக்கர வண்டியை திருடிச் செல்லும் நபர் தொடர்பாக தெரிந்தால் தகவல் வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752691403.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை