மீண்டும் ஒரு நாள்: பழைய மாணவர்கள் ஒன்று கூடல்!
#SriLanka
#School
#Kilinochchi
Lanka4
12 hours ago

பாடசாலை நினைவுகளை மீட்டிப்பார்க்கும் வகையில், கிளி.பாரதி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்யும் மீண்டும் ஒரு நாள் நிகழ்வு 2025 ஜூலை 27ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி தொடக்கம் நாள் முழுவதும் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பாடசாலை வாழ்க்கையின் நிமிடங்கள், மாணவர்களின் ஆவல், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வகுப்பு நினைவுகள் போன்றவை பகிரப்படவுள்ளன. பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி, தங்களின் பள்ளிக் கால நினைவுகளை பகிர்ந்து மகிழ, இது சிறந்த வாய்ப்பாகும்.
நிகழ்விடம்:கிளி.பாரதி மகா வித்தியாலயம்
நாள்: 2025.07.27 நேரம்: காலை 7 மணி முதல்
பழைய மாணவர் சங்கம் – அன்புடன் அழைக்கிறது!
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



