இலக்கத்தகடு இன்றி வீதியில் வந்த குப்பை ஏற்றும் வாகனம்!
#SriLanka
#Batticaloa
#Road
#licences
Lanka4
3 hours ago

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பங்கேற்க, வாழைச்சேனை பகுதிக்கான தவிசாளர் வந்த வாகனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக குப்பைகள் ஏற்ற பயன்படும் உழவு இயந்திரம் போன்ற வாகனம், இலக்கத்தகடு இன்றி மாவட்ட தலைநகரான மட்டக்களப்புக்கு வீதியால் கொண்டு வரப்பட்டது. இந்த வாகனம் இலக்கத்தகடு இன்றி ஏற்கனவே பயன்பாட்டில் இருந்ததா என்பதோடு, பொதுமக்கள் மற்றும் நகர சுகாதாரத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய வாகனங்கள், அதிகாரிகள் சவாரிக்காக மாற்றப்படுவது தகுந்ததா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஒரு விடயத்தில் கட்டுப்பாடுகளை வலியுறுத்தும் பொழுது, இதுபோன்ற சட்டமீறல்களை எளிதில் தவிர்த்து விடுவது முறையா என்ற கேள்வி எழுகின்றது.
இது தொடர்பான அதிகாரிகளின் விளக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



