பிரித்தானியாவில் வாக்களிக்கும் வயது எல்லையில் முக்கிய மாற்றம்

#children #government #Age #England #Vote
Prasu
3 hours ago
பிரித்தானியாவில் வாக்களிக்கும் வயது எல்லையில் முக்கிய மாற்றம்

பிரித்தானியாவில் 1969 ஆம் ஆண்டு வாக்களிக்கும் வயதை 21 லிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது. தற்போது 16 மற்றும் 17 வயதுடையவர்களும் வாக்களிக்கும் திட்டத்தை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

ஜனநாயக ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில், புதிய தேர்தல் மசோதாவை பிரித்தானிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 16 மற்றும் 17 வயதுடையவர்களும் அனைத்து தேர்தலிலும் வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளது. 

ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள உள்ளூர் கவுன்சில் தேர்தல்களுக்கும், செனட் மற்றும் ஸ்காட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கும் குறைந்தபட்ச வாக்களிக்கும் வயது ஏற்கனவே 16 ஆக உள்ளது.

மேலும், வாக்களிக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டைகளின் பட்டியலில், வாக்காளரின் பெயரைக் காண்பிக்கும் பிரித்தானியா வழங்கிய வங்கி அட்டைகளும் சேர்க்கப்பட உள்ளது. 

மேலும், மக்கள் வாக்களிக்கப் பதிவு செய்வதை எளிதாக்கும் வகையில், தானியங்கி வாக்காளர் பதிவு முறை கொண்டு வரப்பட உள்ளது.

இந்த மசோதாவில், பிரித்தானிய தேர்தல் அரசியலில் வெளிநாட்டு தலையீட்டை தடுக்க, அரசியல் நன்கொடைகள் குறித்த விதிகளை கடுமையாக்குதல் ஆகியவை அடங்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752825109.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!