கிளிநொச்சியில் நடைபெற்ற கரைச்சி பிரதேச சபையின் இரண்டாவது சபை அமர்வு

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் இரண்டாவது சபை அமர்வு இன்றுநடைபெற்றது. டிப்போ சந்தியில் 72 கடைகளை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்காக சுமார் 120 மில்லியன் ரூபாய்விடுவிக்க அனுமதிக்கப்பட்டது.
கிளிநொச்சி திருநகர் மயானம் மின் பொருள் தொகுதிகள் பொருத்துவதற்கு 15 மில்லியன் ஒதுக்கப்பட்டது.
முரசு மூட்டை உப அலுவலக நிர்மாணத்திற்கு 18 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டது. பாரதிபுரம் வட்டகையில் ஆயுர்வேத வைத்தியசாலையில் உருவாக்கத்திற்கான பிரேரனை நிறைவேற்றப்பட்டது.
கிளி நொச்சிபசுமை பூங்கா சந்திரன் பசுமை பூங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கல்மடு நகர் ராமநாதபுரம் புன்னைநீராவி ஆனை விழுந்தானில் நான்கு புதிய மயானங்கள் உருவாக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
விவசாய உற்பத்தி பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற போது நிகழ்ந்து வரும் 10 கிலோவிற்கு ஒரு கிலோ கழிவு என்ற முறை மரவள்ளி கிழங்கு தவிந்த ஏனையவற்றிக்கு எதிர்வரும் மாதம் நீக்கப்படுகிறது
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



