இங்கிலாந்தில் ஏலத்தில் 1.7 கோடிக்கு விற்கப்பட்ட மகாத்மா காந்தியின் புகைப்படம்
#England
#Auction
#Photo
Prasu
2 months ago

மகாத்மா காந்தி கடந்த 1931ம் ஆண்டு 2வது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்ற போது அவரை பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டன் சந்தித்தார்.
அப்போது அவர் ஓவியம் வரைவதற்காக காந்தி போஸ் கொடுத்தார். இந்த ஓவியம் 1974 -ஆம் ஆண்டு பொதுக் காட்சிக்கு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மகாத்மா காந்தியின் ஓவியம் ஏலம் விடப்பட்டது. போன்ஹாம்ஸில் நடந்த ஆன்லைன் ஏலத்தில் காந்தி ஓவியம் ரூ.1.7 கோடிக்கு விற்பனை ஆனது.
நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் 3 மடங்கிற்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஓவியருக்கு போஸ் கொடுத்தது இந்த நிகழ்வு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



