பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை!
#SriLanka
#School
#Sri Lanka Teachers
#Lanka4
#Teacher
#SHELVAFLY
Mayoorikka
2 months ago

பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு மாகாண மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட சில கிராமப்புறப் பாடசாலைகளில் அதிகளவான ஆசிரியர்கள் இருப்பதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
ஆசிரியர் பற்றாக்குறையை கொண்ட பிற பாடசாலைகள் உள்ளதாகவும் இந்த பற்றாக்குறை நாடளாவிய ரீதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஏற்ப, நாடு முழுவதும் ஆசிரியர்களை முறையாக மறுபகிர்வு செய்ய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



