பயங்கரவாத தடைச் சட்டம் எந்தவொரு தரப்பினருக்கு எதிராகவும் பயன்படுத்தப்படாது - அரசாங்கம்!

#SriLanka #ADDA #Terrorism Act #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
9 hours ago
பயங்கரவாத தடைச் சட்டம் எந்தவொரு தரப்பினருக்கு எதிராகவும் பயன்படுத்தப்படாது - அரசாங்கம்!

பயங்கரவாத தடைச் சட்டம் எந்தவொரு தரப்பிற்கு எதிராகவும் பயன்படுத்தப்படாது என அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது.

 பயங்கரவாத தடைச் சட்டம் எந்தவொரு இனத்தையோ, மதத்தையோ குறிவைக்கும் வகையில் பயன்படுத்தப்படாது என அமைச்சரவை பேச்சாளர் மற்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

 அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை அல்லது சம்பவத்தின் அடிப்படையில் மட்டுமே அமல்படுத்தப்படும் என வலியுறுத்தினார்.

 சட்டத்தை இரத்து செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு பயங்கரவாதத் தடைச் சட்டம் முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களை வேட்டையாட பயன்படுத்தப்படுகிறது என்ற பொதுமக்கள் கருத்து தவறானது என தெரிவித்துள்ளார். 

 கைதுகள் அல்லது கைது நடவடிக்கைகள் மதம், இனத்தைக் கருத்திலெடுத்தே செய்வதில்லை எனவும் அந்தந்த நிகழ்வுகளின் தனித்துவத்துக்கேற்ப மட்டுமே நடைமுறைக்குக் வரும் எனவும் கூறியுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பணிகள் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1752616706.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!