உலக இளைஞர் திறன் தினதினை முன்னிட்டு கிளிநொச்சியில் ஜெர்மன் பயிற்சி நிறுவனதின் நடைபவனி மற்றும் கண்காட்சி!

கிளிநொச்சியில் உள்ள ஜெர்மன் பயிற்சி நிறுவனம் உலக இளைஞர் திறன் தினதினை முன்னிட்டு தொழில்நுட்ப விழிப்புணர்வு நடைபவனி மற்றும் கண்காட்சி ஒன்றினை மேற்கொள்கிறது.
அந்தவகையில் ஜூலை 15ஆம் திகதி விழிப்புணர்வு நடைபவணி கிளிநொச்சியில் இடம்பெற்றது.
அத்துடன் 16, மற்றும் 17 ஆம் திகதிகளில் ஜெர்மன் பயிற்சி நிறுவனத்தில் கண்காட்சி இடம்பெறுகின்றது.
இளைஞர்களை தொழில் நுட்ப அறிவு சார்ந்தவர்களாக மாற்றும் நோக்குடன் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள ஜெர்மன் பயிற்சி நிறுவனம், இலங்கையில் ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும். இது இலங்கை அரசாங்கத்திற்கும், ஜெர்மன் அரசாங்கத்திற்கும் இடையே உள்ள கூட்டு முயற்சியாகும்.
இந்த நிறுவனம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து, வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு உதவுகிறது.
இதில் மோட்டார் இயந்திரவியல், மின்சாரவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பல துறைகள் பயிற்றுவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



