கைதடி-மட்டுவில் வீதியின் புனரமைப்பை கோரல்
#SriLanka
#Jaffna
#Road
Lanka4
1 month ago

தென்மராட்சி மேற்கில் மட்டுவில் கிராமத்தையும் கைதடி கிராமத்தையும் இணைக்கும் வீதியானது பல ஆண்டுகளாக பயன்படுத்தமுடியாமல் இருப்பது தொடர்பாக சாவகச்சேரி பிரதேச சபைக்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள தவிசாளர் திரு.பொன்.குகதாசன் மற்றும் உபதவிசாளர் திரு.இ.யோகேஸ்வரன் ஆகியோரை பசுந்தேசம் அமைப்பினர் அழைத்துச்சென்று காட்டியதுடன் அதனை புனரமைக்க பிரதேச சபையின் நிதி இல்லை என்றாலும் வேறு வழிகளில் மத்திய அரசின் ஊடாக (தற்போது செயற்படுத்தப்படும் புதிய திட்டங்கள் ஊடக) புனரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
அந்த இடத்திற்கு வருகை தந்த சாவச்சேரி பிரதேச சபை உறுப்பினர்களான திரு.க.சிவபதம், திரு.செ.ஜயபாலன், திரு.க.ரிஜிவர்ணன் ஆகியோர் இரண்டு கிராமங்களை இணைக்கும் அந்த வீதி புனரமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை தவிசாளருக்கு எடுத்துரைத்தனர்.



