வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளராக திரு.தி. சிவரூபன் நியமனம்.

#SriLanka #education #lecturer
Lanka4
6 hours ago
வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளராக திரு.தி. சிவரூபன் நியமனம்.

கிளி/ வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் க.பொ.த. உயர்தர வணிகப் பிரிவில் (1994 AL) மாவட்ட முதல் நிலை பெற்ற மாணவனுமாகிய திரு.தி. சிவரூபன் அவர்கள் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராக 07.07.2025 அன்று நியமனம் பெற்றுள்ளார். 

இவர் முகாமைத்துவ சிறப்புப் பட்டதாரி , பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டதாரி , கல்வியில் முதுமாணிப் பட்டதாரி (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ), பிரபல கணக்கீடு பாட ஆசிரியர், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் ( வர்த்தகம் ), சதுரங்க சங்கத் தலைவர் கிளிநொச்சி மாவட்டம்,பல்வேறு சமூக அமைப்புக்களின் அங்கத்துவம், முன்னாள் இலங்கை ஆசிரியர் சங்க கிளிநொச்சி மாவட்ட தலைவர்,வடக்கு மாகாண ஆசிரியர் ஆலோசகர் சங்க தலைவர் என பல்வேறு பரிமாணங்களில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களூக்கும் பணியாற்றி இலங்கை ஆசிரியர் கல்வியியலாளராக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார்.

தங்களது சேவையால் ஆசிரியர் கல்வி வளம் பெறும். உன்னதம் மிக்க ஆசிரியப் பணி மேலும் உயர்வடையவாழ்த்த்துகின்றோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!