இன்று அதிகாலை மட்டக்களப்பில் நடந்த சோக சம்பவம்: இளைஞர் உயிரிழப்பு

#SriLanka #Batticaloa #Police #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
6 hours ago
இன்று அதிகாலை மட்டக்களப்பில் நடந்த சோக சம்பவம்: இளைஞர் உயிரிழப்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் இன்று அதிகாலை ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 கறுவப்பங்கேணி, அரோஸ் வீதியை சேர்ந்த எஸ்.நிசாந்தன் என்னும் 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

 இன்று அதிகாலை 1.30 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டே அவர் உயிரிழந்துள்ளார். 

 ரயில் கடவையிலிருந்து தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தவரே ரயிலில் மோதுண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலத்தை மோதிய ரயிலில் கொண்டு சென்று ஏறாவூர் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1751148871.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!