துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரை மோதிய கயஸ்; சம்பவ இடத்திலேயே பலியான உயிர்
#SriLanka
#Vavuniya
#Accident
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
6 hours ago

வவுனியா யாழ். வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து வவுனியா யாழ். வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று காலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த கயஸ் ரக வாகனம் வவுனியா யாழ் வீதியில் சென்று கொண்டிருந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவருடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



