முல்லைத்தீவு- துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு!

#SriLanka #Mullaitivu #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
7 hours ago
முல்லைத்தீவு- துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு!

முல்லைத்தீவு- துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளராக தமிழரசு கட்சியின் உறுப்பினர் கனகரத்தினம் செந்தூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 குறித்த பிரதேச சபைக்கான தவிசாளர், உபதவிசாளர் தெரிவு கடந்த 26 ஆம் திகதி துணுக்காய் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, 13 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில் தமிழரசு கட்சி சார்பில் கனகரத்தினம் செந்தூரனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் சிவ குமார் சிந்துஜன் ஆகியோரின் பெயர்கள் தவிசாளர்களாக முன்மொழிக்கப்பட்ட நிலையில் பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

 இந்தநிலையில், தேசிய மக்கள் சக்தி சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர் ஒருவரும் சுயேட்சைக்குழுவின் ஊசி சின்னத்தில் போட்டியிட்ட உறுப்பினர் ஒருவரும் நடுநிலமை வகிக்க தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட கனகரத்தினம் செந்தூரன் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஒரு உறுப்பினரும் சுயேட்சைக்குழு கங்காரு சின்னத்தில் வெற்றி பெற்ற ஒரு உறுப்பிரினதும் ஆதரவுடன் 06 வாக்குகளையும் சி. சிந்துஜன் 05 வாக்குகளையும் பெற்று தமிழரசு கட்சி சார்பில் கனகரத்தினம் செந்தூரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

images/content-image/1751538331.jpg

 இதேவேளை துணுக்காய் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று துணுக்காய் பிரதேச சபை மாநாடு மண்டபத்தில் இடம்பெற்றது 

images/content-image/1751538348.jpg

 நிகழ்வில் உறுப்பினர்கள் மாநாட்டு மண்டபத்திற்கு வரவேற்கப்பட்டனர் துணுக்காய் பிரதேச சபை செயலாளர் மாரிமுத்து மகாதேவன் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது இறை ஆசியுடன் இடம்பெற்ற நிகழ்வில் ட்பிரடேச சபை உறுப்பினர்கள் மதகுருமார்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1751148871.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!