பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்து!
#SriLanka
#Accident
#Bus
#Lanka4
Mayoorikka
5 hours ago

யாழ்.வடமராட்சி மந்திகைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் இன்று (03.07.2026) வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை சேவையில் ஈடுபட்ட பேருந்தை, முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளை மோதியதிலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் காயமடைந்த நிலையி்ல், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



