நெல் கொள்வனவிற்காண புதிய விலை நாளை முதல் மாற்றம்!
#SriLanka
#prices
#Agriculture
Lanka4
19 hours ago

நெல்லை கொள்வனவு செய்ய நாளை முதல் (03) புதிய விலை நடைமுறைப்படுத்த நெல் சந்தைப்படுத்தல் களஞ்சியம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, நாளைய தினம் முதல் புதிய விலைகளில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்யும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய 1 கிலோகிராம் நாடு நெல் வகை 120 ரூபாவுக்கும் 1 கிலோகிராம் சம்பா 125 ரூபாவுக்கும் 1 கிலோகிராம் கீரி சம்பா 130 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



