E-8 விசா பிரிவின் கீழ் தென்கொரியாவில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை!
#SriLanka
#Job Vacancy
#SouthKorea
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 months ago
தென் கொரியாவில் பருவகால வேலைவாய்ப்புக்காக E-8 விசா பிரிவின் கீழ் வேலை வாய்ப்புகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கான முன்மொழிவு அமைச்சரவை ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஒப்புதல் கிடைத்த பிறகு, தென் கொரியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்றும், பின்னர் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.
தற்போது, தென் கொரியாவில் உள்ள 04 மாநிலங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் அவை இந்த மாத இறுதிக்குள் கையெழுத்திடப்படும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
