சமூக ஊடகங்கள் மூலம் இடம்பெறும் மோசடி : முகவர்களை நம்பி ஏமாறும் இளைஞர்கள்!

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் பணிபுரிந்த நபர் ஒருவர் அங்கு வேலை வழங்குவதாகக் கூறி இந்த மோசடியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களிடமிருந்து வீடியோ அறிக்கைகளைப் பெற்று, வீடியோவில் உள்ள அறிக்கைகளை மோசடியாகத் திருத்தி யூடியூப் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்டதன் மூலம் அவர் இந்த மோசடியைச் செய்துள்ளார்.
அத்தகைய தகவல்களை சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்ட பிறகு, அதனை நம்பிய இளைஞர்கள் பலர் பணத்தை அவரிடம் வழங்கியுள்ளனர்.
இவ்வாறாக அவர் பலரை ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு, கண்டறிந்துள்ளது.
இந்த மோசடி குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மேலும் இந்த மோசடியில் சிக்கியவர்களும் பணியகத்திற்கு புகார்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



