நெடுந்தீவு பிரதேச சபை தமிழரசுக் கட்சி வசம்!

#SriLanka #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
16 hours ago
நெடுந்தீவு பிரதேச சபை தமிழரசுக் கட்சி வசம்!

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் தெரிவானார்.

 நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று நெடுந்தீவு பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

 தவிசாளர் பதவிக்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் முன்மொழியப்பட்ட சங்கரப்பிள்ளை சத்தியவரதன் ஏகமனதாக தெரிவானார்.

 உப தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முன்மொழியப்பட்ட செபஸ்ரியன் விமலதாஸ் தெரிவானார்.

 13 உறுப்பினர்களை கொண்ட நெடுந்தீவு பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 6 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 4 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1751148871.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!