மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் அவதூறு செய்தி: மல்வத்து மகா விகாரை அறிக்கை
#SriLanka
#Mahinda Rajapaksa
#Lanka4
#Mahindha
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
2 months ago

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மல்வத்து மகாநாயக்க தேரரிடம் விடுத்த கோரிக்கை தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல் பரப்பப்பட்டு வருவது தொடர்பில் மல்வத்து மகா விகாரை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மல்வத்து மகா விகாரையின் பிரதிப் பதிவாளர் மஹாவெல ரத்தனபால தேரர், மகாநாயக்க தேரரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க மேற்படி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய, எந்த சந்திப்பும் அல்லது தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை என்றும், இதுபோன்ற தவறான செய்திகளை உருவாக்கி பரப்புவதன் ஊடாக தேவையற்ற பொது அமைதியின்மையை உருவாக்க முயற்சிக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



