சர்ச்சைக்குரிய கொள்கலன்களில் இருந்தது என்ன? அர்ச்சுனா வெளியிட்ட தகவல்! (வீடியோ இணைப்பு)

#SriLanka #Parliament #ADDA #Archuna #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
18 hours ago
சர்ச்சைக்குரிய கொள்கலன்களில் இருந்தது என்ன? அர்ச்சுனா வெளியிட்ட தகவல்! (வீடியோ இணைப்பு)

விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் உள்ளே என்ன இருந்தது, அவைகள் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பில் மழுமையான தகவல்களை தன்னால் வழங்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். 

 பாராளுமன்றத்தில் இன்று (30) உரையாற்றிய அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர், விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் உள்ளே என்ன இருந்தது, அவைகள் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பில் மழுமையான தகவல்களை தன்னால் வழங்க முடியும். 

ஆனால், அதற்காக என் மீது போதைப்பொருள் வழக்கில் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்கப் போவதில்லை என்று அரசாங்கம் உத்தரவாதம் வழங்க வேண்டும்.

இல்லையெனில், நான் வேறு நாட்டிற்கு ஓடிப்போய் அதை அம்பலப்படுத்த வேண்டியிருக்கும். 

அந்த 320 கொள்கலன்களுக்குள் என்ன இருந்தது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல பயப்படவில்லை. 

முழு விபரங்களையும் நான் உங்களுக்குச் சொல்ல முடியும், ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. 

ஆனால் எனக்கு இறப்பதற்கு பயமில்லை. இவர்கள் என்னை தேவையற்ற வழக்குகளில் அவ்வப்போது சிக்கவைத்துக்கொண்டே இருக்கிறார்கள். 

இப்போது இவர்களிடம் பொலிஸ் அதிகாரம் உள்ளது. இப்போது இவர்கள் எம்.பி பதவியை பறித்து, உண்மை வெளிவருவதைத் தடுக்க முயற்சிக்கிறார்கள் என தெரிவித்தார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1751148871.jpg



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!