செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் மீட்பு!
#SriLanka
#Jaffna
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
2 months ago

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் இன்றும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்று (26) ஆரம்பிக்கப்பட்டன.
இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியில் கைக்குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 3 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து இன்று (27) இரண்டாம் கட்ட இரண்டாவது நாள் அகழ்வுப் பணியில் இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நாளையும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. செம்மணி புதைகுழியில் தொடர்ந்து மனிதஎலும்புக்கூடுகள் மீட்கப்படுகின்றமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



