யாழில் பெண் ஆசிரியருக்கு பட்டப்பகலில் நடந்த துயர சம்பவம்!

#SriLanka #Jaffna #Crime #Lanka4 #Teacher #SHELVAFLY
Mayoorikka
2 months ago
யாழில் பெண் ஆசிரியருக்கு பட்டப்பகலில் நடந்த துயர சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் பெண் ஆசிரியர் ஒருவரது ஒரு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இது குறித்து மேலும் தெரியவருகையில், ஏழாலை மகா வித்தியாலயத்தில் கடமை புரியும் குறித்த ஆசிரியர் நேற்றையதினம் பாடசாலையில் இருந்து வரும்போது மருதனார்மடம் பகுதியில் வைத்து முகத்தை மூடி துணி கட்டியிருந்த நபர் ஒருவர் அவரது தங்கச் சங்கிலியை அறுத்து சென்றுள்ளார்.

 பாதிக்கப்பட்ட ஆசிரியர் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அந்தவகையில் விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார் நேற்றையதினமே 26 வயதுடைய குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

 குறித்த சந்தேகநபர் ஹெரோயினுடன் கைதாகி 8 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே விடுதலையாகி வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750976006.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!