காருக்குள் எரிந்த நிலையில் தொழிலதிபரின் சடலம் மீட்பு!
#SriLanka
#Death
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
2 months ago

மஹவ, தியபெடே பகுதியில் உள்ள காட்டில் காருக்குள் இருந்து எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குருநாகல், மில்லேவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 25ஆம் திகதி வீட்டைவிட்டுச் சென்ற அவர் வீடு திரும்பாததையடுத்து, அவரது மனைவி தொரடியாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.
இந்த நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, குருநாகல் பொது வைத்தியசாலையில் இன்று (27) பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மஹவ தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



