காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி தொடர்பில் ஜேவிபியிடம் கலந்துரையாடிய ஐ.நா ஆணையாளர்!
#SriLanka
#UN
#Lanka4
#Human Rights
#SHELVAFLY
Mayoorikka
5 months ago
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பானது மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மனித உரிமைகள் மற்றும் நிர்வாகத்தைப் பாதுகாப்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முன்னேற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஸ்தானிகர் தனது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் திருத்தம், மனித உரிமைகளைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் காணாமல் போனவர்கள் மீதான விசாரணை ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
