இலங்கையர்களுக்கு அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை!

#SriLanka #America #Lanka4 #Embassy #SHELVAFLY
Mayoorikka
2 months ago
இலங்கையர்களுக்கு அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையர்கள் மற்றும் பிற வெளிநாட்டு பயணிகளுக்கும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. 

 இதன்படி, தங்கள் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக, குழந்தை பிரசவிக்கும் நோக்கத்துடன் சுற்றுலா விசாக்களில் அமெரிக்காவுக்கு பயணம் செய்பவர்களுக்கு எதிர்காலத்தில் விசாக்கள் மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 குறித்த நோக்கத்துக்காக அமெரிக்கா செல்லும் பயணிகள் பெரும்பாலும் அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் மருத்துவ உதவியை நம்பியிருப்பதாகவும், இது அமெரிக்க வரி செலுத்துவோர் மீது நிதிச் சுமையை சுமத்துவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. 

 எனவே, விண்ணப்பதாரர் ஒருவரின் முதன்மை நோக்கம் குடியுரிமை சலுகைகளுக்காக பிரசவம் என்று நம்பினால், சுற்றுலா விசாக்களை நிராகரிக்குமாறு, தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750976006.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!