பன்றிக் காய்ச்சல் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியீடு!

#SriLanka #Lanka4 #Gazette #Fever #SHELVAFLY
Mayoorikka
2 months ago
பன்றிக் காய்ச்சல் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியீடு!

இலங்கையில் உள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்று பரவக் கூடிய அல்லது அதிக ஆபத்துள்ள பகுதிகளாகக் குறிப்பிட்டு சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 இந்த வர்த்தமானி அறிவிப்பு விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல கடந்த 13ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 குறித்த வர்த்தமானி அறிவித்தலில் பன்றிகளை அதிக ஆபத்துள்ள விலங்குகளாகவும் குறிப்பிட்டுள்ளது. 

கடந்த சில மாதங்களில் இலங்கையின் பல்வேறு பிரதேச செயலகங்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளதாகவும், அது மேலும் பரவ வாய்ப்புள்ளது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதற்கமைய பிரதேச கால்நடை அலுவலரால் வழங்கப்பட்ட அனுமதியின்றி, பாதிக்கப்பட்ட அல்லது அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்குள் அல்லது வெளியே ஆபத்தான பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் தொடர்புடைய பொருட்களை கொண்டு செல்வது, அகற்றுவது, எடுத்துச் செல்வது அல்லது அப்புறப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750457602.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!