பிரித்தானியாவில் சுகாதார அவசர நிலையாக மாறிய காற்று மாசுபாடு

#pollution #England #Emergancy #air
Prasu
2 months ago
பிரித்தானியாவில் சுகாதார அவசர நிலையாக மாறிய காற்று மாசுபாடு

பிரித்தானியாவில் காற்று மாசுபாடு ஒரு பெரும் சுகாதார அவசர நிலையாக மாற்றியுள்ளது.

வாரத்திற்கு 500-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள், ஆண்டுக்கு 30,000 மரணங்கள், மற்றும் 27 பில்லியன் பவுண்டு வரையிலான பொருளாதார இழப்புகள் ஏற்படுவதாக Royal College of Physicians (RCP) வெளியிட்ட அறிக்கை எச்சரிக்கிறது.

தொற்று நோய்கள் மட்டுமல்லாமல், இதயம், மூளை, குழந்தை வளர்ச்சி, நரம்பியல் பாதிப்புகள், புற்றுநோய், மனநலம் ஆகிய பலவிதமான பக்கவிளைவுகளும் இக்காற்று மாசுபாட்டால் ஏற்படுகிறது.

அதுவும் மிகக் குறைந்த அளவிலான மாசுபாட்டிலும் பாதிப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

RCP தலைவர் டாக்டர் மும்தாஸ் பட்டேல், இது சுற்றுச்சூழல் பிரச்சனை அல்ல, இது மக்கள் நலனுக்கான பேரழிவு என்றும், மாசில்லா காற்றும் தூய நீர் அல்லது பாதுகாப்பான உணவு போலவே ஒரு அடிப்படை மனித உரிமை என்றும் கூறியுள்ளார்.

எல்லாஸ் சட்டம் என்ற பெயரில் புதிய மசோதா சுத்தமான காற்றை மனித உரிமையாக சட்டமாக்கும் நோக்கத்துடன் வரவிருக்கிறது.

இது 2013ல் லண்டனில் காற்று மாசுபாட்டால் உயிரிழந்த 9 வயது சிறுமி எல்லா அடூ-கிஸி-டெப்ராவின்பெயரில் முந்தைய விசாரணையைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750406099.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!