மன்னார் - யாழ் பிரதான வீதியில் கோர விபத்து; பலர் படுகாயம்

#SriLanka #Mannar #Accident #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
12 hours ago
மன்னார் - யாழ் பிரதான வீதியில் கோர விபத்து; பலர் படுகாயம்

மன்னார்-யாழ் பிரதான வீதி,கள்ளியடி பகுதியில் இன்று சனிக்கிழமை (3) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

 மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்து கல்லியடி பகுதியில் பணியாளர்கள் ஏற்றுவதற்காக வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

 இதன் போது ஹென்டனர் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த பேருந்துடன் மோதி பின்னர் வீதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீது மோதி பரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

 இதன்போது மோட்டார் சைக்கிளில் நின்ற நபர் காயமடைந்ததால், அவரது மோட்டார் சைக்கிளில் பலத்த சேதமடைந்துள்ளது.

 குறித்த விபத்தில் ஹென்டனர் ரக வாகனத்தின் சாரதி, உதவியாளர் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர். மேலும் ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் 09 பேர் காயமடைந்துள்ளனர்.

 காயமடைந்தவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து குறித்து இலுப்பைக்கடவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1746052587.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!