இரண்டாவது நம்பிக்கையில்லா பிரேரணையிலும் பிரான்ஸ் பிரதமர் வெற்றி

#PrimeMinister #France #Vote #confidence
Prasu
1 year ago
இரண்டாவது நம்பிக்கையில்லா பிரேரணையிலும் பிரான்ஸ் பிரதமர் வெற்றி

இரண்டு நம்பிக்கை இல்லா பிரேரணையில் இருந்து தப்பித்த பிரதமர் பிரான்சுவா பெய்ரூ, தற்போது மீண்டும் தப்பித்துள்ளார்.

La France Insoumise கட்சி கொண்டுவந்திருந்த மூன்றாவது நம்பிக்கை இல்லா பிரேரணைக்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. 

பிரேரணையை நிறைவேற்ற 289 வாக்குகள் தேவை எனும் நிலையில், வெறுமனே 115 வாக்குகள் மட்டுமே ஆதரவாக கிடைத்தது. அதை அடுத்து நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியைச் சந்தித்தது.

வரவுசெலவுத் திட்டத்தினை பகுதி பகுதியாக வாசிக்கும் பிரதமர், 49.3 எனும் அரசியலமைப்பை பயன்படுத்தி வருகிறார். இதனைக் கண்டித்தே La France Insoumise கட்சி இந்த நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவந்திருந்தது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4