பிரித்தானியாவில் காணாமல் போன இரு சகோதரிகளில் ஒருவர் சடலமாக மீட்பு

பிரித்தானியாவில் மாயமான இரண்டு இரட்டை சகோதரிகளைத் தேடும் பணியில், மூன்று வாரங்களுக்குப் பின்னர் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சகோதரிகள் இருவரும் ஜனவரி 7ம் திகதி இரவு 2.12 மணிக்கு அபெர்டீன் பகுதியில் அமைந்துள்ள விக்டோரியா பாலத்தின் அருகே சந்தைத் தெருவில் கடைசியாக காணப்பட்டுள்ளனர்.
கடும் குளிர்காலம் என்பதால், அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் எழுந்த அச்சம் காரணமாக மிகப்பெரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஒருவரின் சடலம் அபெர்டீன் படகு கிளப் அருகே பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அபெர்டீனில் உள்ள குயின் எலிசபெத் பாலத்திற்கு அருகிலுள்ள டீ நதியில் ஒரு நபரின் உடல் காணப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது என பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
தற்போது உடல் மீட்கப்பட்டுள்ளது, விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று சகோதரிகள் இருவர் மாயமான தகவலை அடுத்து, பொதுமக்களின் உதவி கோரப்பட்டது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



