நாட்டின் பல பகுதிகளில் 100mmக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும்!

#SriLanka
Thamilini
1 year ago
நாட்டின் பல பகுதிகளில் 100mmக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும்!

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் இன்று (03.11) 100mmக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது. 

 மேற்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். 

 அத்துடன், நாட்டின்பல பாகங்களிலும் இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலை தொடர்ந்தும் காணப்படுவதால், மின்னலினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை