எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும்!

#SriLanka #Laugfs gas
Mayoorikka
9 months ago
எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும்!

சந்தையில் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.

 விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பல பகுதிகளிலும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை காரணமாக லாஃப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கையிருப்பு நாட்டுக்கு வருவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் லாஃப்ஸ் நிறுவனத்தின் பிரதான முனையம் வெள்ளத்தில் மூழ்கியமை இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 எவ்வாறாயினும், லாஃப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கையிருப்புடன் வந்த சரக்குக் கப்பல் நேற்று (28) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

 இதன்படி, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் எரிவாயு கையிருப்பு விநியோகிக்கப்படும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிட்டிய தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!