மாத்தறையில் பற்றி எரிந்த பாடசாலை கட்டிடம் : நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள மாணவர்கள்!

#SriLanka #School #sri lanka tamil news
Dhushanthini K
10 months ago
மாத்தறையில் பற்றி எரிந்த பாடசாலை கட்டிடம் : நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள மாணவர்கள்!

திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பாடசாலை ஒன்றின் இரண்டு மாடிக் கட்டிடம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ கல்வி வலயத்திற்குட்பட்ட தெலிஜ்ஜவில மத்திய மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடி பல்நோக்கு கட்டிடம் தீக்கிரையாகியுள்ளது.

நேற்று (15ம் திகதி) பிற்பகல் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கட்டடம் தீப்பற்றி எரிவதைக் கண்டு அலறி துடித்ததையடுத்து, பிரதேசவாசிகளும் மாலிம்பட பொலிஸாரும் வந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.

ஆனால் அதற்குள் கட்டிடத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இக்கட்டடத்தில் உள்ள விளையாட்டுப் பொருட்கள், 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான மெத்தைகள், பாடசாலை மேசைகள், நாற்காலிகள், மின் உபகரணங்கள் உட்பட பல பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று (16) பிற்பகல் வந்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதுவரை வெளியாகியுள்ள உண்மைகளின் பிரகாரம், கட்டிடத்திற்கு ஏதோ ஒரு குழுவினர் தீ வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இக்கட்டடத்தில் பாடசாலையின் 5 வகுப்புகள் உள்ள நிலையில் தற்போது பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதில் பாடசாலை அதிகாரிகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!