தேசிய அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்த ஹிருணிகா!
#SriLanka
#Resign
Dhushanthini K
10 months ago

சமகி வனிதா பலவேகவின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து ஹிருணிகா பிரேமச்சந்திர விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான கடிதம் கட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசவை சங்கடப்படுத்துவதற்காக இந்த முடிவை எடுக்கவில்லை என்று கூறிய அவர், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை முழுவதும் பெண்கள் கூட்டம் நடத்தப்பட்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தேர்தலில் இந்த வேலையை வேறு ஒருவரிடம் ஒப்படைத்தால் நல்லது என்று நினைதமையால் பதவி விலகுவதாக தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



