வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலாக கணக்கு வாக்கெடுப்பை சமர்ப்பிக்க திட்டமிடும் அரசாங்கம்!
#SriLanka
#sri lanka tamil news
#budget
Thamilini
1 year ago
இந்த வருடம் டிசெம்பர் மாதத்தில் வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலாக கணக்கு வாக்கெடுப்பை சமர்ப்பிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நவம்பர் 21ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க அரசாங்கத்திற்கு போதிய அவகாசம் இருக்காது என வாராந்த அமைச்சரவை மாநாட்டில் அவர் தெரிவித்தார்.
மூன்று மாதங்களுக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், அதன் பின்னர் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் டிசம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.