ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது!
#SriLanka
#Arrest
Dhushanthini K
10 months ago

ஹலவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணவில வீதியிலுள்ள புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில் ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (15) கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 04 மலேசிய ஆண்கள், 03 எத்தியோப்பியா ஆண்கள் மற்றும் ஒரு பெண், ஒரு கென்யா பெண் மற்றும் ஒரு சீன ஆண் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இணையத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 20 கணனிகள், 03 ரவுட்டர்கள் மற்றும் 282 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



