அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை : மஹிந்த அறிவிப்பு!
#SriLanka
#Mahinda Rajapaksa
#Election
#sri lanka tamil news
Dhushanthini K
10 months ago

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ராஜபக்சக்கள் தற்காலிக விலகல் ஒன்றையே மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொதுத் தேர்தலில் இருந்து முன்னாள் அரசியல் தலைவர்கள் பலர் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது ஜனாதிபதியின் உரையை நீங்கள் செவிமடுத்தீர்களா? முதன்முறையாக இக்குழுவினர் ஓய்வு பெறவுள்ளனர் என்றார். நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ராஜபக்ஷ இல்லை, நான் கேட்கவில்லை.. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியதுடன் ஷசீந்திர ராஜபக்ஷ மொனராகலையில் போட்டியிடுவதாகவும் தேர்தலில் 113 ஆசனங்களை பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.



