வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

#SriLanka #Election
Dhushanthini K
10 months ago
வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களை அந்தந்த மாவட்ட செயலகங்களில் இன்று (16.10) பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 அனைத்து மாவட்டங்களினதும் விருப்பப் பட்டியல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாகவும், விருப்பப்பட்டியல்களை சரிபார்த்து மாவட்ட செயலகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் ஆணையாளர் நாயகம்  சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். 

 பொதுத் தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு செலவழிக்கக்கூடிய குறைந்தபட்ச தொகை இன்று வர்த்தமானி மூலம் வெளியிடப்படும் என சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். 

 இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பான உத்தரவுகளை அமுல்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!