அரபி மொழி குரான்களின் தடையை நீக்க NPP அரசிடம் இஸ்லாமியர்கள் வேண்டுகோள்!
#SriLanka
#Muslim
Mayoorikka
10 months ago

அல்குர்ஆன் பிரதிகளையும் அரபு கிதாபுகளையும் இறக்குமதி செய்வதிலுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சுமுகமான சூழ்நிலையை உருவாக்கித் தருமாறு,தோழர் றமீஸ் முஹிடீனும் Rameez Mohideen அஷ்ஷெய்க் முனீர் முழஃப்பரும், கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்திடம் இன்று கோரிக்கை விடுத்தனர்.
நேற்று அமைச்சரைச் சந்தித்து இது தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிலவற்றை தோழர் றமீஸ் முஹிடீன் கையளித்தார்.
சட்டத்தரணி றிஷாட் புஹாரியும் உடன் இருந்தார். எதிர்காலத்தில் இதிலுள்ள இடர்பாடுகள் நீக்கப்பட்டு, சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.
குர்ஆன் பிரதிகளை, முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தினர்.



