பிரச்சார செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அரியநேந்திரன்: தேர்தல்கள் ஆணைக்குழு

#SriLanka #Election
Mayoorikka
10 months ago
பிரச்சார செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அரியநேந்திரன்: தேர்தல்கள் ஆணைக்குழு

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வடக்கு கிழக்கின் தமிழ் பொது வேட்பாளராக சங்கு சின்னத்தில் போட்டியிட்ட அரியநேத்திரன் வழங்கத் தவறியுள்ளார்.

 பத்தரமுல்லை சீலரதன தேரர் மற்றும் சரத் கீர்திரத்ன ஆகியோரும் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

 இந்த மூவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 இக் குற்றத்திற்கான அபராதத் தொகை 100,000 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது பிரச்சார நிதி அறிக்கைகளை சமர்ப்பிக்க நேற்று முன்தினம் (13) நள்ளிரவு வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

 அதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் செலவின அறிக்கையை 35 வேட்பாளர்கள் வழங்கியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!