நாடாளுமன்ற தேர்தல் : வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

#SriLanka #Election #sri lanka tamil news
Thamilini
1 year ago
நாடாளுமன்ற தேர்தல் : வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்  தொடர்பில் வெளியான தகவல்!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் நாளை (16) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 இதுவரை அனைத்து மாவட்டங்களின் விருப்பு எண்களையும் தேர்தல் ஆணையம் பெற்றுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

 விருப்ப எண்களை சரிபார்த்த பின், உரிய ஆவணங்களை மீண்டும் மாவட்ட செயலாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, இன்றும் (15) நாளையும் விருப்பு எண்களை வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 இதேவேளை, அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. 

 இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் செயற்பாடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட உள்ளது. 

 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் வேட்பாளர் ஒருவர் செலவிடும் பணத்தின் அளவும் இங்கு கவனம் செலுத்தப்பட உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை