டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
#SriLanka
#Dollar
Dhushanthini K
10 months ago

மத்திய வங்கியின் அண்மைய அறிக்கையின்படி, கடந்த 11 ஆம் திகதி வரை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 10.5 சதவீதம் வலுவடைந்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களினால் பணம் அனுப்புதல், சுற்றுலா வருமானம் மற்றும் ஏற்றுமதி வருமானம் ஆகியன அதிகரித்தமையின் காரணமாக ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சராசரியாக அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 293 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



