வளிமண்டலத்தின் கொந்தளிப்பான நிலைமை : மழையுடன் கூடிய வானிலையே நீட்டிக்கும்!
#SriLanka
#weather
Thamilini
1 year ago
அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த அறிவிப்பில், மேல், சப்ரகமுவ, வடமேற்கு, வடமாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கவனம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, தற்போதைய மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகபட்சமாக 100மில்லி மீற்றருக்கு மேல் இருக்கலாம்.
இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு மேலும் தெரிவிக்கின்றது.