ஐக்கிய மாதர் சக்தியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகிய ஹிருணிகா

#SriLanka #Women #Resign #Politician
Prasu
10 months ago
ஐக்கிய மாதர் சக்தியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகிய ஹிருணிகா

ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான ஐக்கிய மாதர் சக்தியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து தான் விலகுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அறிவித்துள்ளார். 

பதவியில் இருந்து விலகிய போதிலும், கட்சியின் செயற்பாட்டு உறுப்பினராகத் தொடர்ந்தும் இருந்து வருவதாகவும், 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது அமைப்பாளர்கள் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என கட்சியில் இருந்து சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் ஏற்பட்ட விரக்தியே தனது பதவி விலகளுக்கு காரணம் என ஹிருணிகா தெரிவித்துள்ளார். 

இந்த பதவியை ராஜினாமா செய்வதற்கான தனது முடிவில் இந்த குற்றச்சாட்டு முக்கிய பங்கு வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 எவ்வாறாயினும், தனது அரசியல் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ள பிரேமச்சந்திர, எதிர்வரும் தேர்தலில் பொது மக்கள் தம்மை மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வார்கள் என நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!